ரூ 3,000,00,00,000 யார் கொடுத்தது….மோடி அரசுக்கு அடுத்த சிக்கல்…சர்சையில் படேல் சிலை…!!
உலகின் உயரமான வல்லபாய் படேல் சிலைக்கு நிதியுதவி செய்தவர் யார் என்பது குறித்து இந்தியா டுடேயின் உண்மையறியும் குழு ஆய்வு செய்து உள்ளது.
குஜராத் மாநிலத்தில் 182 மீட்டர் உயரத்தில் சர்தார் வல்லபாய் படேலுக்கு ரூ.3000 கோடி ரூபாயில் மத்திய அரசு சிலை வைத்துள்ளது. இது குறித்து இங்கிலாந்தின் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் போன் விமர்சனம் செய்தார். தற்போது சிலைக்கான நிதி சர்ச்சையில் சிக்கியுள்ளது.
சிலை கட்டுமானத்திற்கான கார்ப்பரேட் சமூக பொறுப்பு (CSR) நிதி கார்ப்பரேட் சமூக பொறுப்பு (CSR) நிதி சிலை கட்டுமானத்திற்காக பொதுத்துறை நிறுவனங்களின் (பி.எஸ்.யூ.க்கள்) சுமார் 2,500 கோடி ரூபாயை இந்த சிலை உருவாக்கத்துக்கு வழங்கி உள்ளதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.ஹில்டா ஆப்ரகாம் என்ற வாசகர் ஒருவர் இந்த பதிவை இந்திய டுடே உண்மை அறியும் குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்து உள்ளார்.
இந்த சிலை அமைப்பிற்கு பொதுத்துறை நிறுவனங்கள் 2,525 கோடி ரூபாய் செலவழித்துள்ளதாக சமூக வலைதளத்தில் கூறப்பட்டு உள்ளது.இந்தியா டுடே உண்மை கண்டறியும் குழு பொதுத்துறை நிறுவனங்கள் சிலைக்கு நன்கொடை அளித்திருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். ஆனால் சமூக வலைதளத்தில் வந்துள்ள தொகை தொடர்பான கூற்றுகள் மிகைப்படுத்தப்பட்டவை என கூறுகிறது. மத்திய அரசை அடுத்து குஜராத் மாநில அரசு இந்த சிலை உருவாக்கத்திற்கு மிகுந்த பங்களிப்பை செய்துள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பு விவரங்களை அறிய, இந்தியா டுடே உண்மை கண்டறியும் குழு பல பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வரவு செலவுத் திட்ட வருடாந்தர அறிக்கைகள் மூலம் அறிந்து உள்ளது.
* சர்தார் படேல் சிலை திட்டம் அக்டோபர் 7, 2010 அன்று குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியால் முதலில் அறிவிக்கப்பட்டது.
* ஆனால் சர்தார் வல்லபாய் படேல் ராஷ்ட்ரிய ஏக்தா அறக்கட்டளை 2013 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டபிறகுதான் இந்த திட்டம் வேகமெடுத்தது.
* 2014 ல் மோடி பிரதமர் ஆன பிறகு, அந்த திட்டம் மேலும் வேகத்தை அதிகரித்தது.
* 2014-15 பட்ஜெட்டில் திட்டத்தில் மத்திய அரசு இந்த நோக்கத்திற்காக ரூபாய் 200 கோடி ஒதுக்கீடு செய்தது. அதன்பிறகு, குஜராத் அரசு மாநில வரவு-செலவுத் திட்டத்தில் சிலைக்கு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.
திட்டத்திற்கான மாநிலத்தின் பங்களிப்பைக் காட்டும் புள்ளிவிவரங்கள் பின்வருமாறு.
2018-19 Rs 899 கோடி
2016-17 Rs 1066 கோடி*(பழங்குடியினர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தை நிறுவுவதற்கு நிதியுதவி வழங்கியது)
2015-16 Rs 915 கோடி
2013-14 Rs 100 கோடி
இதற்கிடையில், சில பொதுத்துறை நிறுவனங்கள் சிலைக்கு நிதியளித்து உதவி உள்ளன. ஆனால் இது கம்ப்ட்ரோலர்’ஸ் – ஆடிட்டர் ஜெனரல் (சிஏஜி) கீழே செல்லவில்லை.
சிஏஜி அறிக்கையில் பொதுத்துறை நிறுவனங்கள் ஓஎன்ஜிசி, ஐஓசிஎல், பிபிசிஎல், எச்பிசிஎல், மற்றும் ஆயில் நிறுவனங்கள் மொத்தம் ரூ. 146.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிஏஜி அறிக்கையின்படி ஆண்டுதோறும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களால் நன்கொடையாக வழங்கப்படும் தனிநபர் தொகை விவரம் வருமாறு:-
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் – ரூ.50 கோடி
இந்திய ஆயுள் கார்ப்பரேஷன் லிமிடெட் ரூ. 21.83 கோடி
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ரூ. 25 கோடி
இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ரூ. 25 கோடி
ஆயில் இந்தியா லிமிடெட் ரூ. 25 கோடி
லோக்சத்தாவின் கட்டுரையின் அடிப்படையில் செய்யப்பட்ட கூற்றுகள், திட்டத்திற்கான CSR நிதியுதவிக்கான எந்த நேரத்தையும் குறிப்பிடவில்லை, அவை குறிப்பிடும் ஆண்டுகளை சரிபார்க்க கடினமாக இருந்தது.
எனினும், 2015 ஆம் ஆண்டு முதல் இந்த பொதுத்துறை நிறுவனங்களின் வருடாந்திர அறிக்கைகளைப் பார்க்க நாங்கள் முடிவு செய்தோம்.
சமூக வலைதள கூற்றுப்படி இந்திய ஆயில் கார்ப்பரேஷன் சிலைக்கு 900 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. ஆனால் 2016-17 ஆம் ஆண்டில் மட்டும் ரூ. 21.83 கோடி மட்டுமே ஆயில் கார்ப்பரேஷன் வழங்கியுள்ளது.
சமூக வலைதளத்தில் ஓஎன்ஜிசி, ரூ.500 கோடி வழங்கி உள்ளதாக கூறி உள்ளது. ஆனால் ஆனால் வருடாந்திர அறிக்கையின்படி, திட்டத்திற்கான CSR நிதியில் இருந்து ரூபாய் 50 கோடி மட்டுமே செலவிட்டுள்ளது.
பிபிசிஎல், ஓ.ஐ.சி. மற்றும் கெயில் ஆகிய மூன்று நிறுவனங்களும் சிலைக்கு 250 கோடி ரூபாய் செலவு செய்துள்ளன என சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.
ஆனால் பிபிசிஎல் ரூ 45 கோடியும், ஓ.ஐ.சி. ரூ 25 கோடியும், கெயில் நிறுவனம் ரூ. 25 கோடியும், கவர் கிரிடு ரூ.12.5 கோடியும் வங்கி உள்ளது.
எச்பிசிஎல் 250 கோடி ரூபாய் வழங்கியுள்ளதாக லோக்சத்தா கட்டுரை குறிப்பிட்டுள்ளது. 2016-17 வருடாந்திர அறிக்கையின்படி 25 கோடி ரூபாயை வழங்கியுள்ளது.
குஜராத் மினரல்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (GMM) இந்த திட்டத்திற்காக 100 கோடி ரூபாய் அளித்துள்ளதாக கூறபட்டு உள்ளது. ஆனால் அது ரூ 11 கோடி மட்டுமே வழங்கிய வருடாந்திர அறிக்கையில் கூறபட்டு உள்ளது என இந்தியா டுடே கண்டறிந்து உள்ளது.சர்தார் பட்டேல் சிலை திட்டத்தின் செலவினங்களை பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கியுள்ள கூற்றுக்கள் ஓரளவு உண்மையாக இருப்பதாக இந்தியா டுடேவின் உண்மை கண்டறியும் குழு கண்டறிந்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் நிச்சயமாக ரூ 2,500 கோடிக்கு செலவழிக்கப்படவில்லை எனக் கூறப்பட்டது. மேலும், சீனாவிலிருந்து கடன் பெறும் நிதி பற்றிய கூற்றுக்கள் உண்மையாக உள்ளன என கண்டறிந்து உள்ளது.
dinasuvadu.com