Categories: இந்தியா

ரூ 3,000,00,00,000 செலவு…உலகிலேயே பெரிய சிலை…திறந்து வைத்தார் பிரதமர்….நாட்டுக்கு அர்ப்பணிப்பு…!!

Published by
Dinasuvadu desk

உலகிலேயே மிக உயரமான சிலையான, சர்தார் வல்லபாய் படேல் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்று அழைக்கப்படும் முதலாவது உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலத்தில் மிகப்பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டு உள்ளது. நர்மதா மாவட்டம் சர்தார் சரோவர் அணை அருகே சாது பேட் என்ற குட்டித்தீவில் இந்த சிலை நிறுவப்பட்டு உள்ளது.சர்தார் வல்லபாய் படேல், நாட்டை ஒன்றுபடுத்தியதை குறிப்பிடும் வகையில், ‘ஒற்றுமைக்கான சிலை’ என்று இது அழைக்கப்படுகிறது.
இதன் உயரம் 182 மீட்டர். உலகிலேயே மிக உயரமான சிலையாக கருதப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை விட 2 மடங்கு உயரம் கொண்டது
இந்த சிலையை உருவாக்க 70 ஆயிரம் டன் சிமெண்ட், ஆயிரக்கணக்கான டன் எக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது. சிலையின் வெளிப்புற பூச்சுக்காக 1,700 டன் வெண்கலம் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி, இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். சிலையை அவர் திறந்து வைத்தவுடன், இந்திய விமானப்படைக்கு சொந்தமான 3 விமானங்கள் வானில் பறந்து சென்று, தேசிய கொடியில் உள்ள 3 வண்ணங்களில் பொடிகளை தூவி, வானில் தேசிய கொடியை உருவாக்கின.மேலும் நாட்டின் ஒற்றுமையை குறிக்கும்வகையில், சிலை அருகே உருவாக்கப்பட்டு உள்ள ஒற்றுமை சுவரையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். அப்போது, 3 போர் விமானங்கள், அந்த சுவருக்கு மேலே தாழ்வாக பறந்து சென்றன.பின்னர், படேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, மி-17 ரகத்தை சேர்ந்த 2 ஹெலிகாப்டர்கள் மூலம் படேல் சிலை மீது மலர்கள் தூவப்பட்டன.
சிலை திறப்பை முன்னிட்டு, குஜராத் காவல்துறை, ஆயுதப்படை மற்றும் துணை ராணுவப்படைகளைச் சேர்ந்த பாண்டு வாத்திய குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும், இசை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. 29 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட கலைஞர்களின் நடன, இசை நிகழ்ச்கிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.சிலை திறப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளை பொதுமக்கள் காண வசதியாக, 135 மீட்டர் உயரத்தில் பார்வையாளர் மாடம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கிருந்து சர்தார் சரோவர் அணையையும், அதைச் சுற்றி உள்ள மலைகளையும் பார்த்து ரசிக்கலாம்.இந்த சிலைக்கு மொத்த செலவு 3000 கோடி என்பது குறிப்பிடதக்கது.
dinasuvadu.com 
 

Recent Posts

அரசியலுக்கு எப்போது? ‘இதுவே நல்லா இருக்குனே’ ரூட்டை மாற்றிய நடிகர் சூரி.!

திருச்சி: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெளிவந்துள்ள "விடுதலை 2" இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல…

38 minutes ago

‘எனக்கு மாரடைப்பு வந்திருக்கும்’.. சச்சின், கபில் தேவ் குறித்து அஸ்வின் எக்ஸ் பதிவு!

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…

1 hour ago

ஈரோடு கிழக்கு தொகுதி யாருக்கு? மு.க.ஸ்டாலின் சூசக பதில்!

கோவை : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021இல் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியில்…

2 hours ago

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் வெட்டிப்படுகொலை! நேரில் பார்த்தவர் பரபரப்பு பேட்டி!

நெல்லை : இன்று (டிசம்பர் 20) திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் ஒரு கொடூர கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.…

3 hours ago

அமெரிக்க யூடியூப்பருக்கு விருந்து வைத்த தமிழர்கள்… ஆங்கிலத்தில் கலக்கும் தமிழன்… வைரல் வீடியோ.!

சென்னை: அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ஜெய் ஸ்ட்ரேஸி (jay streazy) என்பவர், உலகமுழுவதும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு…

3 hours ago

கோலி மட்டும் கேப்டன் இருந்தா அஸ்வின் ஓய்வு பெற்றிருக்க மாட்டார்! பாசித் அலி பேச்சு!

சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் திடீரென தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…

4 hours ago