ரூ.15 ,00,000 எங்கே…கருப்பு பணம் எங்கே…பழைய ரூ 500 , ரூ 1000 ஒழிக்க என்ன காரணம்…பதில் இல்லா மத்திய அரசு..!!

Default Image

பாஜக ஆட்சிக்கு வந்தால், வெளிநாடுகளில் இருக்கும் கறுப்புப்பணம் அனைத்தும் மீட்கப்பட்டு, இந்தியர்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் தலா 15 லட்சம் ரூபாய் விகிதம் செலுத் தப்படும் என்று 2014 மக்களவைத் தேர்தலின்போது, நரேந்திர மோடி வாக்குறுதி அளித்திருந்தார்.
ஆட்சிக்கு வந்தபின், 2016-ஆம் ஆண்டு, நவம்பர் 8-ஆம் தேதி இரவு திடீரென 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்த மோடி, இது கறுப்புப் பணம், கள்ளப்பணத்தை வெளிக்கொண்டு வரும் நடவடிக்கை என்று மக்களிடம் கூறினார்.ஆனால், மோடி ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகள் முடிந்த நிலையிலும், பணமதிப்பு நீக்கத்தை அறிவித்தும் இரண்டாண்டுகள் ஆன பின்பும் இதுவரை, கறுப்புப் பணம் எவ்வளவு மீட்கப்பட்டுள்ளது; எத்தனை இந்தியர்களின் வங்கிக் கணக்கில் ரூ. 15 லட்சம் செலுத்தப்பட்டது என்ற விவரங்களை பிரதமர் மோடி வெளியிட்டதாக தெரியவில்லை.
இந்நிலையில்தான், கறுப்புப் பணத்தை மீட்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? மோடி அரசு கைப்பற்றிய கறுப்புப் பணம் எவ்வளவு? வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்டு மக்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்ட தொகை எவ்வளவு? என்று ஐஎப்எஸ் அதிகாரியான சஞ்சீவ் சதுர்வேதி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனு அளித்திருந்தார்.மத்திய தகவல் ஆணையமும், சஞ்சீவ் சதுர்வேதி அளித்துள்ள மனுவைச் சுட்டிக்காட்டி அதற்கு பதிலளிக்குமாறு, பிரதமர் அலுவலகத்திற்கு உத்தரவு பிறப்பித்தது. மத்திய தலைமைத் தகவல் ஆணையர் ராதா கிருஷ்ணமாத்தூர் இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.
ஆனால், ஊழல் அமைச்சர்கள் குறித்த விவரங்களை அளிக்க முடியாது என பிரதமர் அலுவலகம் தற்போதுமறுத்துள்ளது.அதேபோல மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகஅரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபின்,2014 முதல் 2017 வரை மத்திய அமைச் சர்களாக இருந்தவர்கள் மீது எழுந்த ஊழல் புகார்கள்; அதனடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்றும் சஞ்சீவ் சதுர்வேதி கேள்விஎழுப்பியிருந்த நிலையில், அவற்றுக் கும் பிரதமர் அலுவலகம் பதிலளிக்க மறுத்துள்ளது.தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் இதுபோன்ற கேள்விகளுக்கு எல்லாம் பதிலளிக்க முடியாது என்று பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.
DINASUVADU 
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்