ரூ.1.5 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்..!
திருப்பதி அருகே டிப்பர் லாரியில் ஏற்றி கடத்த முயன்ற ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். திருப்பதி வனப்பகுதியை ஒட்டிய கரக்கம்பாடி சாலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் டிப்பர் லாரி ஒன்று நின்றதை செம்மரக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கண்டனர்.
அங்கு சென்று பார்க்கையில் 50க்கும் மேற்பட்டோர் செம்மரக்கட்டைகளை லாரியில் ஏற்றிக் கொண்டிருந்ததாகவும், போலீசாரைக் கண்டதும், செம்மரக்கட்டைகள் ஆங்காங்கே வீசி விட்டு அவர்கள் தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு தப்பி ஓடியவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்தில் இருந்து ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.