ரூபாய் 7,47,00,000 வருமானத்தை பெற்றுக் கொடுத்த தலை முடி..!!

Default Image

பலம் பெரும் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் செலுத்திய 53 ஆயிரத்து 600 கிலோ தலைமுடி தற்போது ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தின் மூலம் ரூ 7.49 கோடி வருவாய் கோவில் நிர்வாகத்துக்கு கிடைத்து உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப பல்வேறு காணிக்கைகளை வழங்குகின்றனர். அதில் ஒன்றாக மெட்டையடித்து பக்தர்கள் தலைமுடியை  காணிக்கையாக  செலுத்துகின்றனர். அவ்வாறு பக்தர்கள் செலுத்திய தலைமுடிகள்  திருப்பதியில் உள்ள தேவஸ்தான மார்கெடிங் துறை அலுவலகத்தின் இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு தலைமையில் ஆன்லைனில் தலைமுடி விற்பனை செய்யப்பட்டது.

பக்க்தர்கள் காணிக்கையாக செலுத்திய தலைமுடி 6 ரகமாக தரம் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.இவற்றின் மொத்த எடை  53 ஆயிரத்து 600 கிலோ இருந்தது.இந்த தலைமுடிகள் முழுவதும்  விற்பனை செய்யப்பட்டதின் மூலம் ரூ 7.49 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று திருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தான மார்கெடிங் துறை அலுவலகத்தின் இணை செயல் அலுவலர் தெரிவித்தார்…

 

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்