"ரூபாய் 45,270,0,0,00,000 தேவை" கேரளாவை விடாத துயரம்…!!
கேரளத்தை புனரமைக்க ரூ.45,270 கோடி தேவை ஐ.நா.பிரதிநிதிகள் குழு அறிக்கையில் தகவல்
பெருவெள்ள பாதிப்பிலிருந்து மீண்டெழவும், கேரளத்தின் புனரமைப்புக்கும் 45 ஆயிரத்து 270 கோடி ரூபாய் தேவை என ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை வியாழனன்று ஐ.நா. பிரதிநிதிகள் குழு கேரள தலைமைச் செயலாளரிடம் வழங்கியது. வெள்ள பாதிப்பை தடுக்க நெதர்லாந்தை முன்மாதிரியாக கொண்டு கேரளம் நீர்க்கொள்கையை வடிவமைக்க வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சாலைகள் அமைக்க மட்டும் ரூ.8554 கோடி தேவைப்படும். குட்டநாடுக்காக மட்டும் தனியாக திட்டம் தயாரிக்க வேண்டும். வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்கள் குடியேறுவதை தடுக்க வேண்டும். கேரளத்தில் ஏற்பட்டது மாபெரும் மழை மற்றும் வெள்ளமாகும். தேவையான தொகையை மிக விரைவாக சேகரித்து புனரமைப்பு பணிகளை புயல்வேகத்தில் செய்ய வேண்டும் என ஐ.நா குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
DINASUVADU