"MP _களுக்கு ரூ.1,997,00,00,000 சம்பளம்" RTI தகவல்..!!
MPக்களுக்கு 4 ஆண்டுகளுக்கு 1997 கோடி ஊதியம் மற்றும் சலுகைகள் வழங்குவதாக தகவலறியும் உரிமை சட்டத்தின் மூலமாக தெரிய வந்துள்ளது.சமூக ஆர்வலர் சந்திரசேகர் கௌட் என்பவர் தகவலறியும் உரிமை சட்டத்தின் மூலமாக மக்களவை செயலகத்திடம் MP_க்களின் சம்பள விவரம் கேட்டறிந்தார்.அதற்கு பதிலளித்த மக்களவை செயலகம் மக்களவையில் 545 MP_க்களும், மாநிலங்கவையில் 245 MP_களும் உள்ளனர் என்றும், இதில் மக்களவை MP உறுப்பினர்களுக்கு கடந்த 4 ஆண்டுளில் ஊதியம் மற்றும் சலுகைகளாக ரூபாய் 1554 கோடி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் ஒவ்வொரு MP_களுக்கும் தலா 71 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் ஊதியம் மற்றும் சலுகையாக வழங்கப்பட்டுள்ளதாகவும் ,
மாநிலங்களவை MP_களுக்கு 4 ஆண்டுகளில் 443 கோடி ரூபாய் ஊதியம் மற்றும் சலுகைகளாக வழங்கப்பட்டதாகவும் ஒவ்வொரு MP_களுக்கும் தலா 44 லட்சத்து 33 ஆயிரம் ஊதியமாகவும் , சலுகைகளாகவும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தது.2018 பட்ஜெட்டில் MP _க்களின் சம்பள உயர்வு 100 % உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது .
DINASUVADU