ரூபாய் 1,00,00,000 கேரளாவுக்கு நிவாரணம் அளித்த பிரபல இசையமைப்பாளர்…!!

Default Image

கேரளாவில் கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத கனமழை பெரும்வெள்ளத்தால் வெள்ளத்தால், 400-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடத்தைவிட்டு நிவாரண முகாமகளில் தங்கி வந்தனர்.கிட்டத்தட்ட 20,000 கோடிக்கு மேல் இழப்பு இருக்கும் என கருதப்படும் சூழலில் கேரளா மக்களுக்கு பலரும் உதவு வந்தனர்..

கேரள மாநில மழை வெள்ள பாதிப்புக்கு, தமிழக அரசு, பொதுமக்கள், தொழிலதிபர்கள், திரைப் பிரபலங்கள் என நாட்டின் பல்வேறு தரப்பினரும் அவரவர்களால் முடிந்த நிதியுதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் , அமெரிக்காவின் ஓர்லான்டோ உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று இசை விழாக்களை நடத்தி வரும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், அதன்மூலம் கிடைத்த 1,00,00,000 பணத்தை கேரள வெள்ள நிவாரணத்திற்கு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரஹ்மான், “அமெரிக்காவில் இசை கச்சேரி நடத்திவரும் என் சக கலைஞர்களும் நானும் சேர்ந்து கேரள மக்களுக்கு செய்யும் சிறு உதவி. இதன்மூலம் உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.மேலும் இத்துடன், கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு அனுப்பும் 1 கோடி ரூபாய்க்கான காசோலையின் புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.

இந்நிலையில் இசையமைப்பாளர் AR.ரஹ்மானின் இந்த செயலுக்கு ரசிகர்கள் பாராட்டுகளையும் , வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்….
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்