லட்சுமி படத்தை அச்சிடுங்க..மத்திய அரசிற்கு சுவாமி ஜடியா! -சுவாரஸ்ய தகவல்
- லட்சுமி படத்தை இந்திய ரூபாய் தாள்களில் அச்சிட வேண்டும் என்று சுப்பிரமணியசுவாமி யோசனை
- படத்தை அச்சிட்டால் பணத்தின் மதிப்பு உயரும் என்று கணிப்பு
இது குறித்து மத்தியபிரதேச மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சுப்பிரமணியசுவாமி விவேகானந்தர் குறித்து உரை நிகழ்ந்தினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்திய ரூபாய் நோட்டுக்களில் லட்சுமி தேவியின் படத்தை அச்சிட வேண்டும் அவ்வாறு அச்சிட்டால் இந்திய ரூபாயின் பணமதிப்பு உயரும் என்று தெரிவித்தார்.இந்தோனேஷியாவின் பண மதிப்பு நோட்டில் விநாயகர் படம் அச்சிடப்பட்டது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.