ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்த வாய்ப்பு…!
பணவீக்கத்தின் உயர்வால், இந்திய ரிசர்வ் வங்கி மீண்டும் வட்டி விகிதங்களை உயர்த்தக் கூடும் என இந்திய தொழில் கூட்டமைப்பு கூறியிருக்கிறது..
நாட்டின் பணவீக்கம், கடந்த மே மாதத்தில், 4 மாதங்களில் இல்லாத அளவாக, 4 புள்ளி 87 விழுக்காடாக அதிகரித்தது.
பழங்கள், காய்கறிகள், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு இதற்கு காரணியாக சுட்டப்படுகிறது. அண்மையில், வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை, புள்ளி 25 விழுக்காடு அளவிற்கு, ரிசர்வ் வங்கி உயர்த்தியது.
இந்த நிலையில், பணவீக்கத்தின் மதிப்பு, அதே அளவாக நீடிப்பதாலும், இதேநிலை தொடரும் என்பதாலும், ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி மீண்டும் உயர்த்த அதிகளவு வாய்ப்பிருப்பதாக, இந்திய தொழில் கூட்டமைப்பு கூறியிருக்கிறது.