ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் அதிரடி அறிவிப்பு..!
வங்கித்துறையை வலிமைப் படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு ஆஜராகி பல்வேறு கேள்விகளுக்கு விளக்கமளித்த உர்ஜித் படேல், வாராக்கடன், நிதி முறைகேடு, பணத்தட்டுப்பாடு உள்ளிட்ட தற்போதைய பிரச்சினைகளில் இருந்து வங்கித்துறை விரைவில் மீண்டெழும் எனவும் கூறியுள்ளார்.
ஏடிஎம் மையங்களில் பணத்தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளும் விரைவில் தீர்க்கப்படும் என நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் உர்ஜித் படேல் உறுதியளித்துள்ளார்.