இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகரிப்பு : ராம்நாத்கோவிந்த்..!
இந்தியா 2025க்குள் 5 லட்சம் கோடி டாலர் மதிப்பிலான பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி முன்னேறி கொண்டிருப்பதாக குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் தெரிவித்துள்ளார்.
மூன்று நாடுகள் பயணத்தின் ஒரு பகுதியாக கிரீஸ் சென்ற அவருக்கு பாரம்பரிய முறையிலான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கு நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அவர், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் வேகமாக முன்னேறி வருவதாகத் தெரிவித்தார்.
மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் 2025-ஆம் ஆண்டில் 5 லட்சம் கோடி டாலர் என்ற வலுவான பொருளாதாரத்தையும், உலகின் மூன்றாவது பெரிய நுகர்வோர் சந்தையாக மாறுவதையும் இலIndianக்காக கொண்டு செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். தற்போது இந்தியப் பொருளாதாரத்தின் மதிப்பு 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி டாலராக உள்ளது.