பா.ஜ.க-விற்க்கே ஆர்வம் இல்லை…ராமர் கோவில் விவகாரம் குறித்து சிவசேனா எம்.பி பேட்டி…!!
அயோத்தியில் ராமர் கோவில் காட்டுவேன் என்று மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கோ, உத்தரபிரதேசத்தை ஆளும் யோகி ஆதித்யநாத் அரசுக்கோ எந்த ஆர்வமும் இல்லை. அதற்கான அறிகுறியும் அவர்களிடம் தென்படவில்லை. எனவேதான் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை மோடி அரசு தாமதப்படுத்தி வருகிறது என்று தெரிவித்தார்.ராமருக்கு கோவில் கட்டுவதை நாங்கள் ஒருபோதும் தேர்தல் பிரசாரமாக வைக்கவில்லை. ஆனால் அதை முன்னிறுத்தி பிரசாரம் செய்தவர்களிடம் கோவில் கட்டும் எண்ணம் இல்லை. பா.ஜனதா வெற்றி பெறுவதற்கு ஆர்.எஸ்.எஸ். பெரிதும் உதவியதுஇவ்வாறு அவர் கூறினார்.
dinasuvadu.com