ராமர் கோவில் கட்டியே தீர வேண்டும் அயோத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்…!!துணை ராணுவம் குவிப்பு…பதற்றத்தில் ஜென்மபூமி..!!!
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராடக்கூடும் என்பதால் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க துணை ராணுவப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஜென்ம பூமியாக கருதப்படும் அயோத்தில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி இந்து அமைப்புகள் உத்தரபிரதேச மாநில அயோத்தியில் தர்மசபா கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பை ஏற்று இதில் பங்கேற்பதற்காக வட மாநிலங்களில் இருந்து விஷ்வ இந்து பரிசத், ஆர்.எஸ்.எஸ் மற்றும் சிவசேனா தொண்டர்கள் என அனைவரும் அங்கு ஒன்று திரண்டனர்.
இந்நிலையில் கூட்டம் நடைபெறும் அயோத்திக்கு வந்தடைந்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அங்குள்ள புனிதா கங்கை நதிக்கரையில் ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தார். பின்னர் இதே போல் மும்பை தானே உள்ளிட்ட இடங்களில் உள்ள சிவசேனா அலுவலகங்களில் சிவசேனா தலைவர் தாக்கரேவின் ஆர்த்தியை போல் ராமர், சீதை, அனுமார் சிலைகளுக்கும் பிள்ளையார் கோவில்களில் ஆரத்திகள் எடுக்கப்பட்டது.
ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடிய அயோத்தில் ராமர் கோவில் கட்டப்படும் தேதியை மத்திய அரசு உடனே அறிவிக்க வேண்டும் என்று கர சேவகர்கள் மத்திய அரசுக்கு பலத்த நெருக்கடியை கொடுத்து வருகின்றனர்.இதனிடையே அயோத்தியில் பல்லாயிரம் பேர் ஒரே இடத்தில் திரண்டிருப்பதால் மற்ற மதத்தினர் வசிக்கும் பகுதியில் பதற்றமான சூழலால் ஏற்பட்டுள்ளது.
எனவே அப்பகுதிகளில் துணை ராணுவப் படையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அயோத்தியில் நிலவும் அசாதரண சூழ்நிலையில் பாதுகாப்பு நிலை குறித்து உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அரசு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
DINASUVADU