ராமர் கோவிலை அரசே கட்ட வேண்டும்…இல்லையென்றால் மோடி அரசு மக்கள் நம்பிக்கை இழக்கும்…!!

Default Image
அயோத்தியில் ராமர் கோவிலை பா.ஜ.க. கட்டாவில்லை என்றால்  மக்களின் நம்பிக்கையை இழக்கும் என பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார் .
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் முதலாவது பதஞ்சலி அங்காடியை  நேற்று திறந்துவைத்த பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனரான பாபா ராம்தேவ்  பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவதற்கு இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. ஒன்று மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தாமாகவே கோவிலை கட்டிமுடிப்பது. மற்றொன்று ஜனநாயக ரீதியில் நாடாளுமன்றத்தில் இதற்கென தனி சட்டத்தை இயற்றி அரசுசே  கோவிலை கட்டுவது.இதில் ஒருவேளை மக்களே கோவிலை கட்டினால் அது கோர்ட்டு மற்றும் சட்டத்தை அவமதிப்பதாகும்.பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அவசர சட்டத்தை இயற்றி அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட வேண்டும். அப்படி செய்ய வில்லை என்றால்  பா.ஜ.க. மக்களின் நம்பிக்கையை இழக்கும்.
dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்