ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி இந்து அமைப்பை சேர்ந்த சுமார் 2 லட்சம் பேர் நாளை அயோத்தியில் பேரணி நடத்த உள்ளதால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கடந்த ஒரு மாத காலமாக அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்ரே வலியுறுத்தி வருகிறார்.
வரும் 25-ம் தேதி அயோத்தியில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்படும் எனவும் அறிவித்திருந்தார். இதனையொட்டி சிவசேனா மற்றும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் பேர் நாளை அயோத்தியில் பிரம்மாண்ட பேரணி நடத்த உள்ளனர். இதற்காக இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து அமைப்பினர் அயோத்தி வந்துள்ளனர்.இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அயோத்தியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பதற்றமான இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
dinasuvadu.com
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனின் அப்பா விஷ்வநாத், தன் மகனின் கிரிக்கெட் வாழ்க்கையில் முன்னாள் இந்திய…
சென்னை : தமிழகத்தில் தினமும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர்…
கேரளா : ஏப்ரல் மாதம் வயநாடு தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் வென்ற ராகுல் காந்தி, வயாநாடு எம்பி பதவியை ராஜினாமா…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில் விக்னேஷ் என்ற இளைஞர் புற்றுநோய் மருத்துவரான பாலாஜியை கத்தியால் குத்திய சம்பவம் பெரும்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில் இன்று காலை நடந்த கத்திக்குத்து சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிண்டி மருத்துவமனையில்…
சென்னை: சென்னையில் மேலும் ஒரு டாக்டர் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. கிண்டி அரசு ஹாஸ்பிடலில் இன்று காலை டாக்டர் பாலாஜி…