ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய மோடி..!!
ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிப் பண்டிகையை நாட்டின் ஒவ்வொரு பகுதியிலுள்ள ராணுவ வீரர்கள்,பாதுகாப்புப் படை வீரர்களுடன் கொண்டாடி வருகிறார்
2014ம் ஆண்டு சியாச்சினில் உள்ள ராணுவ முகாமுக்கு வருகை தந்த மோடி, உலகின் மிக உயரமான போர்ப் பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார் 2015ம் ஆண்டு அமிர்தசரஸில் உள்ள காஸாவில் டோக்ராய் போர் நினைவிடத்தில் வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினார்.
2016 ம் ஆண்டு இமாச்சலில், இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினார்.2017 ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திப்போராவில் உள்ள பிஎஸ்எஃப் படை வீரர்களுடன் தீபாவளிப் பண்டிகையை பிரதமர் நரேந்திர மோடி கொண்டாடினார்
இந்த நிலையில், நடப்பாண்டு தீபாவளியை எல்லையில் உள்ள வீரர்களுடன் கொண்டாடப்போவதாக தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பிரதமர் மோடிக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். டுவிட்டரில் நேதன்யாகூ வெளியிட்ட வாழ்த்துச்செய்திக்கு பதிலளித்த பிரதமர் மோடி, “ ஒவ்வொரு ஆண்டும் எல்லைப்பகுதிக்கு சென்று, வீரர்களுக்கு ஆச்சர்யம் அளிப்பேன்.
நடப்பாண்டும், தீரம் மிக்க நமது வீரர்களுடன் இணைந்து தீபாவளியை கொண்டாட உள்ளேன். வீரர்களுடன் நேரத்தை செலவிடுவது மிகவும் சிறப்பானது. கொண்டாட்டத்துக்கு பிறகு, அது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிடுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
dinasuvadu.com