ராணுவ வீரர்களின் வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் : 4 பேர் பாலி..!
நாகாலாந்து மாநிலத்தில் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையைச் சேர்ந்த வீரர்கள் மீது கப்லாங் தீவிரவாதக் குழுவினர் தாக்குதல் நடத்தியதில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
மேலும் பலர் காயம் அடைந்தனர். வீரர்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது வழிமறித்த கப்லாங் தீவிவாதிகள், துப்பாக்கியால் சுட்டும் கையெறி குண்டுகளை வீசியும் வீரர்கள் எதிர்பாராத நேரத்தில் கடும் தாக்குதல் தொடுத்தனர்.
இதனால் நிலை குலைந்த ராணுவத்தினர் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். காயமடைந்த 6 வீரர்கள் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலமாக அஸ்ஸாம் மாநிலம் ஜோர்ஹாத்துக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.