Categories: இந்தியா

ராணுவ உளவாளி என்று கூறும் தீவிரவாதிகள்….வாலிபரை சுட்டு கொல்லும் மர்மம்…!!

Published by
Dinasuvadu desk
ராணுவ உளவாளி என்று கூறி வாலிபரை தீவிரவாதிகள் சுட்டு கொல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் சபாநகரி கிராமத்தில் வசித்து வந்தவர் நதீம் மன்சூர்.  இவர் ராணுவத்திற்கு தீவிரவாதிகளின் இருப்பிடம் பற்றி தகவல் கூறினார் என்ற குற்றச்சாட்டில் தீவிரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்டார்.
இந்த நிலையில், தீவிரவாத இயக்கத்தின் தளபதி ரியாஸ் நைகூ வெளியிட்டுள்ள ஆடியோ பதிவொன்று அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.அதில், தீவிரவாதிகளிடம் பேசும் மன்சூர், வீட்டிற்கு செல்லும் வழியில் கிராமத்தில் தீவிரவாதிகளை பார்த்தேன்.  ராணுவ அதிகாரிக்கு மிஸ்டு கால் ஒன்று கொடுத்தேன்.  அவர் என்னை அழைத்த பின், எனது வீடு அருகே கிராமத்தில் தீவிரவாதிகள் உள்ளனர் என அவரிடம் கூறினேன் என்று பேசியுள்ளார்.
இதுபற்றி பேசிய தளபதி நைகூ, மன்சூர் 2 தீவிரவாதிகளை பற்றி ராணுவத்திடம் கூறியுள்ளான்.  அவர்கள் கடந்த 6ந்தேதி சோபியானின் சபாநகரி பகுதியில் நடந்த என்கவுண்டரில் கொல்லப்பட்டனர் என கூறினார்.தொடர்ந்து மற்றொரு வீடியோவில், நதீம் மன்சூரின் உடலில் தீவிரவாதிகள் குண்டுகளை பாய்ச்சுகின்றனர்.  இந்த வீடியோ சமூக வலை தளங்களில் பரவி வைரலாகி வருகின்றது.
இந்நிலையில், மன்சூரின் உடல் நேற்று காலை கைப்பற்றப்பட்டது.  இதற்கு தீவிரவாதிகள் பொறுப்பேற்று உள்ளனர்.பேராசையால் மன்சூர் படையினரிடம் தகவல் கொடுத்துள்ளான்.  நாங்கள் யாரையும் கொல்ல விரும்பவில்லை.  ஆனால் அவர்கள் (தகவல் அளிப்போர்) எங்களை அப்படி செய்ய கட்டாயப்படுத்துகின்றனர். இதுபோன்ற வீடியோக்கள் வருங்காலங்களில் வெளியிடப்படும்.  துரோகிகள் இதே முடிவை எட்டுவர் என கூறியுள்ளார்.
dinasuvadu.com
Published by
Dinasuvadu desk

Recent Posts

இஸ்ரோ வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! நாளை விண்ணில் ‘மிக’ முக்கிய நிகழ்வு!

இஸ்ரோ வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! நாளை விண்ணில் ‘மிக’ முக்கிய நிகழ்வு!

டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…

42 minutes ago

சட்டப்பேரவையில் காரசார விவாதம்.. ஈபிஎஸ்க்கு சவால் விடுத்த மு.க ஸ்டாலின்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…

1 hour ago

“சீமான் கருத்துக்கள் பதற்றத்தை ஏற்படுத்துகிறது!” உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…

2 hours ago

கரடு முரடான ரோட்டிற்கு குட்’பை’… விரைவில் வருகிறது பறக்கும் கார்? வைரல் வீடியோ உள்ளே…

சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில்,  சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…

2 hours ago

“18 வயதில் ரேஸிங் தொடங்கினேன்…ரேஸ் முடியும் வரை நடிக்க மாட்டேன்” அஜித் குமார் அதிரடி அறிவிப்பு!

துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு…

2 hours ago

“திருப்பதியில் விஐபிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை கைவிட வேண்டும்” – பவன் கல்யாண்!

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…

3 hours ago