ராஜீவ் கொலையாளிகளை விடுவிப்பது ஆபத்தான முன்னுதாரணமாகி விடும் : ராம்நாத்..!

Default Image

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந் தேதி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு மரண தண்டனையும், நளினி, சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. பலர் விடுதலை செய்யப்பட்டனர்.

பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேருக்கும் ஆயுள் தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரும் ஜெயிலில் 27 ஆண்டுகளாக இருந்து வருகிறார்கள். ஆயுள் தண்டனை கைதிகள் 14 ஆண்டுகளுக்கு மேல் ஜெயிலில் இருந்தால் அவர்களை விடுவிப்பது வழக்கமானதாக இருக்கிறது.

இவர்கள் 7 பேரும் 20 ஆண்டுகளுக்கு மேல் ஜெயிலில் இருந்து விட்டதால் விடுதலை செய்வது என்று தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால், இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனுதாக்கல் செய்தது.

இதனால் விடுதலைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் மறுசீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

இது சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டு மத்திய உள்துறையின் விளக்கத்தை கேட்டு இருந்தது. பின்னர் மத்திய அரசு 7 பேரின் உடல்நிலை, குடும்ப சூழ்நிலை, பொருளாதார பின்னணி உள்ளிட்ட 8 விவரங்களை கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது

அதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்தது. மேலும் மத்திய உள்துறை 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக ஜனாதிபதியின் கருத்தையும் கேட்டது. தமிழக அரசின் பதில்களும், ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதை பரிசீலித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ராஜீவ் கொலையாளிகள் 7 பேரையும் விடுவிக்க முடியாது என்று கூறிவிட்டார்.

இதுபற்றிய தகவல் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஜனாதிபதி தனது உத்தரவில் என்ன கூறி இருக்கிறார்? என்ற விவரங்கள் இப்போது கிடைத்துள்ளன. அதில் ஜனாதிபதி கூறியிருப்பதாவது:-

ராஜீவ்காந்தி கொலையில் சம்பந்தப்பட்ட வெளி நாட்டினர் 4 பேர் மற்றும் இந்த கொலையில் உடந்தையாக இருந்த இந்தியர்கள் 3 பேர் என 7 பேரையும் விடுவிப்பது என்பது ஒரு ஆபத்தான முன்னுதாரணமாகிவிடும். மேலும் இது, சர்வதேச அளவிலும் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

நாட்டின் முன்னாள் பிரதமரை கொலை செய்து ஈடு இணையற்ற தவறுகளை செய்திருக்கிறார்கள். சரித்திர கிரிமினல் குற்றத்தை இந்த நாட்டில் செய்திருக்கிறார்கள். அவர்களுடைய செயல்பாடுகள் மிகவும் ஒழுக்கக் கேடானதாகும்.

வெளிநாட்டை சேர்ந்த பயங்கரவாத அமைப்பு மிகவும் திட்டமிட்டு ஒருங்கிணைத்து கொடூரமான இந்த செயலில் ஈடுபட்டுள்ளது. அதில், 9 போலீஸ் அதிகாரிகள் உள்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டின் ஜனநாயகத்தையே சீர்குலைத்து முடக்கி உள்ளனர். இந்த கொலையாளிகளுக்கு விசாரணை கோர்ட்டு மரண தண்டனை விதித்துள்ளது. பெண் மனித வெடிகுண்டை பயன்படுத்தி கொடூர சதித்திட்டத்தின் மூலம் ஏராளமானோருடைய உயிரை பறித்து இருக்கிறார்கள் என்பதால் இந்த தண்டனை வழங்கப்பட்டு இருக்கிறது.

இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு 3 பேர் கொண்ட பெஞ்சும் இதில் உள்ள சதி திட்டங்களை உறுதி செய்து அவர்கள் மோசமான குற்றம் செய்ததை சுட்டிக்காட்டி அரிதிலும் அரிதான வழக்கு என்று கூறி இருக்கிறது.

விடுதலைப்புலிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் மூலம் இந்த கொலை திட்டம் நிறைவேற்றப்பட்டு இந்திய ஜனநாயகத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். எனவே, அவர்களை விடுவிக்க முடியாது.

இவ்வாறு ஜனாதிபதி தனது உத்தரவில் கூறி இருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்