ராஜீவ் காந்தியை கொலை செய்யப்பட்டது போல் பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்ய மாவோயிஸ்டுகள் திட்டம்! அவசர ஆலோசனை
உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பிரதமர் நரேந்திரமோடியின் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக உயர்மட்ட ஆலோசனை நடத்தினார்.
The NSA, HS and DIB were present in the meeting. The Home Minister has directed that all necessary measures be taken in consultation with other agencies to suitably strengthen the security arrangements for the Prime Minister.
— गृहमंत्री कार्यालय, HMO India (@HMOIndia) June 11, 2018
ராஜீவ் காந்தியை கொலை செய்யப்பட்டது போல் பிரதமர் மோடியைக் கொலை செய்ய மாவோயிஸ்டுகள் திட்டமிட்டது அண்மையில் தெரியவந்தது. இது தொடர்பாக கடிதம் ஒன்று மஹாராஷ்டிரா போலீசாருக்கு கிடைத்ததை அடுத்து, உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டது. இந்த நிலையில் பிரதமரின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், உளவுத்துறை இயக்குனர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். இதனிடையே உள்துறை அமைச்சகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், பிரதமரின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்பு ஏஜென்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.