ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சாமியார் அசாராம் பாபு மீதான பாலியல் வன்முறை வழக்கில் நாளை தீர்ப்பு!ஜோத்பூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

Default Image

நாளை சாமியார் அசாராம் பாபு மீதான பாலியல் வன்முறை வழக்கில்,தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி, ஜோத்பூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் வைத்து, சாமியார் அசாராம் பாபு தம்மை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதாக சிறுமி புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் அசாராம் பாபு உள்ளிட்ட 5 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்றது. ராஜஸ்தான் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஜோத்பூர் மத்திய சிறையில் வைத்து நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

இதை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரச்சனைக்குரிய பகுதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜோத்பூருக்குள் வரும் வாகனங்களை குறிப்பாக குஜராத்தில் இருந்து வரும் வாகனங்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்