ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் மர்மநபர்களால் அம்பேத்கர் சிலை உடைப்பு!
மர்மநபர்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் அமைந்திருந்த அம்பேத்கரின் சிலையை உடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து வட மாநிலங்களில் வன்முறை வெடித்தது. இதனை அடுத்து அண்மையில் ராஜஸ்தானில் உள்ள காந்தி சிலை மர்மநபர்களால் உடைக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக ACHROL பகுதியில் அமைந்திருந்த அம்பேத்கர் சிலையையும் மர்மநபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குபதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.