ராஜஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் பட்ட பகலில் ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனாவின் தலைவர் சுக்தேவ் சிங் கோகமேடி இன்று தலைநகர் ஜெய்ப்பூரில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஷியாம்நகர் பகுதியில் உள்ள சுக்தேவ் சிங் கோகமேடி வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டனர். அதன் பிறகு அவர் மெட்ரோ மாஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
சுக்தேவ் சிங் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட தகவல் கிடைத்ததும், உள்ளூர் போலீசார் மற்றும் உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்தனர். இந்த சம்பவம் முழுவதும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கோகமேடியின் வீட்டிற்குள் துப்பாக்கிச்சூடு நடத்திய சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.இந்த செய்தி மாநிலம் முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது. பின்னர் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சுக்தேவ் சிங் கோகமேடி மீது நான்கு முறை துப்பாக்கியால் சுடப்பட்டார். தோட்டாக்கள் சுக்தேவ் சிங் மீது எங்கு தாக்கியது என்பது இதுவரை தெரியவில்லை. தாக்குதல் நடத்தியவர்கள் யார், அவர்கள் எங்கிருந்து வந்தனர் என்பது குறித்து இதுவரை எதுவும் தகவல் தெரியவில்லை, குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
தனி அமைப்பை உருவாக்கிய சுக்தேவ் சிங் கோகமேடி:
சுக்தேவ் சிங் கோகமேடி ராஷ்ட்ரிய கர்னி சேனாவு அமைப்புடன் நீண்ட காலமாக தொடர்பில் இருந்தார். சில நாட்களுக்கு முன்பு கர்னி சேனா அமைப்பில் ஏற்பட்ட தகராறுக்குப் பிறகு ராஷ்ட்ரிய ராஜ்புத் கர்னி சேனா என்ற பெயரில் தனி அமைப்பை உருவாக்கினார்.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…