ராஜஸ்தானில் நேரிட்ட பலத்த புயல் மழையால் 12 பேர் உயிரிழந்தனர். …!

Default Image

12 பேர் ராஜஸ்தானில் நேரிட்ட பலத்த புயல் மழையால்  உயிரிழந்தனர்.

ராஜஸ்தான் மாநிலத்தின் பல பகுதிகளில் நேற்று கனத்த மழை பெய்தது. இதன் காரணமாக, பரத்பூர் மற்றும் தோல்பூர் மாவட்டங்களின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

புயல் மழை காரணமாக அங்குள்ள வீடுகள் கடுமையாக சேதமடைந்தன, 1000க்கும் மேற்பட்ட மரங்கள் வேறோடு சாய்ந்தன.

இதன் காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி தோல்பூர் பகுதியில் 7 பேர், பாரத்பூர் பகுதியில் 5 பேர் என 12 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 100க்கும் மேற்பட்டோர், அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வருகின்றனர்.

மாநிலத்தின் பல பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆக்ரா – தோல்பூர் இடையிலான ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டதால்,  ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்