ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு…முதல்வர் மகன் மனு…!!
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யக் கோரி மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானின் மகன் கார்த்திகேய சவுகான் புகார் அளித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் ஜாபுவா என்னுமிடத்தில் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி பனாமா ஆவணங்களில் சிவராஜ்சிங் சவுகானின் மகன் பெயர் உள்ளதாகவும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் பேசினார். இதற்குப் பதிலளித்த சிவராஜ்சிங் சவுகான், தன்மீதும் தன் குடும்பத்தினர் மீதும் ராகுல்காந்தி பொய்க் குற்றச்சாட்டுக்களைக் கூறுவதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில் சிவராஜ் சிங் சவுகானின் மகன் கார்த்திகேய சவுகான், தன்னைப் பற்றிப் பொய்யான குற்றச்சாட்டுக்களைக் கூறிய ராகுல்காந்தி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யக் கோரி போபால் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நவம்பர் மூன்றாம் நாள் விசாரணைக்கு வரவுள்ளது.
dinasuvadu.com