ராகுல்காந்தி கர்நாடகாவில் அமைச்சர் பதவி கிடைக்காதவர்களை சமாதானப்படுத்த முயற்சி!
கடந்த புதன்கிழமை கர்நாடகாவில் 25 புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.இந்நிலையில், அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு குறித்து காங்கிரஸ் கட்சி கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது. தங்களுக்கு ஏற்பட்ட அநீதியை மதசார்பற்ற ஜனதா தளம் சரிசெய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
சித்தராமையா அமைச்சரவையில் இருந்த பலருக்கு அமைச்சர் பதவி கிடைக்காததால் ஏமாற்றமடைந்த எம்.பி. பாட்டீல், தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட பலர், கட்சித் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து முறையிட்டனர். இதில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், அதிருப்தியுடன் உள்ள 20 எம்.எல்.ஏக்களை மீண்டும் அழைத்துப் பேச ராகுல் திட்டமிட்டுள்ளார். தமது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பேச்சு நடத்தியபின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக எம்.பி. பாட்டீல் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகளைச் சேர்ந்த பலர், பா.ஜ.க.வில் சேரத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை கவனத்தில் கொண்டு வலுவான எதிர்க்கட்சியாக பாஜக செயல்படும் என்றும் அவர் கூறினார். 104 எம்.எல்.ஏக்கள் கொண்ட வலிமையான கட்சியாக பாஜக இருப்பதாகவும் எடியூரப்பா தெரிவித்தார்
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.