ராகுல்காந்தியின் கட்டிப்பிடி வைத்தியம் தேவை இல்லாத ஓன்று..!பிரதமர் நரேந்திர மோடி ஆவேசம்
பிரதமர் நரேந்திர மோடி உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜான்பூரில் ((Shahjahanpur)) நடைபெற்ற விவசாயிகளுக்கான நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினர். இதில் பேசிய அவர், நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்ததற்கான காரணத்தைக் கேட்டால் அதைக் கூற முடியாமல், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தேவையின்றி தம்மை வந்து கட்டித் தழுவியதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் 4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கென செயல்படுத்தப்படுகின்றன என்று விவசாயிகள் வளர்ச்சி கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.வங்கிக் கணக்கில் விவசாயிகளுக்கு மானியத் தொகைகள் நேரடியாக வழங்கப்படுகின்றன. விவசாயிகளின் வாழ்க்கை மேம்பட என்ன செய்ய வேண்டுமோ அதை அரசு செய்யும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.