உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்,ஷொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கை விசாரித்து மரணமடைந்த நீதிபதி லோயாவின் மரணத்தை சந்தேகிக்கும் மனுக்கள் அனைத்தையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து , காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது தன்னுடைய வார்த்தைக் கத்தியை வீசியுள்ளார்.
லோயா மரணத்தை சந்தேகித்து தனித்த விசாரணை கோரும் மனுக்கள் பின்னணியில் ராகுல் காந்தி இருப்பதாகவும் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு ராகுல் காந்திக்கு பெரும் பின்னடைவு என்றும் கருத்து தெரிவித்துள்ளார் யோகி ஆதித்யநாத்.