ரயில் மோதி கோர விபத்து… 50க்கும் மேற்பட்டோர் பலி , நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை…

Default Image
அமிர்தசரஸில் உள்ள சவுரா பஜார் பகுதியில் உள்ள ஜோதா பதக் எனும் இடத்தில் ராவணன் உருவபொம்மைதகன நிகழ்ச்சி இன்று மாலை நடந்தது. அப்போது, ராவணன் உருவபொம்மை எரிக்கும் நிகழ்வு நடக்கும் இடத்துக்கு அருகே ரயில்வே தண்டவாளம் செல்கிறது.
இதனால், ராவணன் பொம்மை எரிப்பு நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் கூடி இருந்தனர். அப்போது, ரயில் தண்டவாளத்தை மறித்து ஏராளமான மக்கள் நின்றிருந்தனர். ராவணன் பொம்மை எரிக்கப்பட்டபோது, பட்டாசு வெடிக்கப்பட்டது.அப்போது ஜலந்தரில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி ரயில் ஒன்று வேகமாக வந்தது, பட்டாசு வெடிக்கும் சத்தத்தில் தண்டவாளத்தில் ரயில் வரும் சத்தமும், ரயிலையும் மக்கள் கவனிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. வேகமாக வந்த ரயில், தண்டவாளத்தில் நின்றிருந்த மக்கள் மீது கண்ணிமைக்கும் வேகத்தில் மோதிவிட்டுச் சென்றது.
இது குறித்து அமிர்தசரஸ் துணை ஆட்சியர் ராஜேஷ் சர்மா கூறுகையில், விபத்து நடந்த இடத்தில் 50 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, பலி எண்ணிக்கை மேலும் உயருமா எனத் தெரியாது, காயமடைந்த 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார்

Image result for பஞ்சாப் முதல்வர் அமரிந்தர்பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் ட்விட்டரில் கூறுகையில், காயமடைந்தவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும், மருத்துவசிகிச்சையும் அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், அமிர்தசரஸ் விபத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். என் மனதை அதிரச் செய்யும் செய்தியாக இருக்கிறது. அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். அனைத்து உதவிகளையும் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறேன் எனத் தெரிவித்தார்.
Image result for பிரதமர் மோடி
பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், அமிர்தசரஸ் விபத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். என் மனதை அதிரச் செய்யும் செய்தியாக இருக்கிறது. அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். அனைத்து உதவிகளையும் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறேன் எனத் தெரிவித்தார்.Image result for ராகுல் காந்திகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், பஞ்சாபில் நடந்த ரயில்விபத்தில் 50பேர் பலியான தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. விபத்து நடந்த இடத்துக்கு உடனடியாக காங்கிரஸ் தொண்டர்களும், மாநிலஅரசும் சென்று விரைந்து மீட்புப்பணியில் ஈடுபடக் கேட்டுக்கொள்கிறேன். விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கலையும், அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல்களையும் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.Image result for ராஜ்நாத் சிங்அமிர்தசரஸ் அருகே ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live
Haryana Ex OmPrakashChautala
TN Assembly
arrest
bipin rawat accident pilot
mk stalin eps
Viduthalai Part 2 Movie Twitter Review