ரயில்வே துறையின் புதிய அதிரடி திட்டம்..!
ரயில்வே துறை தற்போது புதிய பல திட்டங்களை கொண்டுள்ளது.அதில் ஒன்றான ஆப்பரேசன் சுவர்ண் என்னும் திட்டத்தின் கீழ் ராஜதானி, சதாப்தி ரயில்களின் பெட்டிகளை ரயில்வே துறை தரம் உயர்த்தி வருகிறது.
இந்திய ரயில்வேயில் ராஜதானி எனப்படும் நெடுந்தொலைவு ரயில்களும், சதாப்தி என்னும் குறுகிய தொலைவு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் மற்ற விரைவு ரயில்களைவிடக் கூடுதல் கட்டணம் பெறப்படும் அதேநேரத்தில், பயணிகளுக்கான வசதி குறைந்துகொண்டே வருகிறது.
இதையடுத்து 14ராஜதானி, 15சதாப்தி ரயில்களை ஒவ்வொன்றையும் 50லட்ச ரூபாய் செலவில் புதுப்பித்துத் தரம் உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொழுதுபோக்கு, பாதுகாப்பு, காலந்தவறாமை, புதிய வசதிகள் கொண்ட கழிவறைகள், உட்புற வடிவமைப்பு ஆகியவற்றால் இந்த ரயில்களின் தரம் உயர்த்தப்படுகிறது.