ரயில்வே திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை செயல்படுவதில் சிக்கல்..!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நிறுவப்பட்ட திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை செயல்படுவதில் சிக்கல் நீடிப்பதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெய்ப்பூர் ரயில் நிலையம் அருகே திடக்கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை தொடங்குவதற்கான ஒப்பந்தம் 2016ஆம் ஆண்டு ஏலத்தில் விடப்பட்டது. இந்த ஆலைக்கு தேவையான உபகரணங்கள் அனைத்தும் நிறுவப்பட்ட நிலையில், உற்பத்திப் பணிகளை தொடங்குவதில் சிக்கல் நீடிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ரயில்வேக்கு பயன்படுத்தப்பட உள்ளதால், அதற்கான ஜி.எஸ்.டி.யை யார் செலுத்துவது என்பதில் குழப்பம் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும், இத்திட்டத்திற்கு கடன் கொடுக்கவும் வங்கிகள் தயக்கம் காட்டுவதாக கூறியுள்ள அதிகாரிகள், ரயில்வே இதில் தலையிட்டு பிரச்சனையை தீர்க்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.