ஜம்மு காஷ்மீரில் ரம்ஜானை முன்னிட்டு மத்திய அரசு அறிவித்த ஒருமாத சண்டை நிறுத்தம் இன்று முடிவுக்கு வருகிறது. இதனால் இம்மாதம் முழுவதும் தீவிரவாதிகள் மற்றும் பாகிஸ்தானின் தாக்குதலுக்கு ஆளாகி கடும் உயிர்ச்சேதத்தை சந்தித்த இந்திய ராணுவத்தின் கைகள் கட்டவிழ்க்கப்படுகின்றன.
ரம்ஜானை தாண்டியும் சண்டை நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டும் என்று காஷ்மீர் அரசியல் கட்சிகள் கோரியுள்ளன. எனினும் இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்காது என்றே கூறப்படுகிறது.
நேற்று பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவர் ஸ்ரீநகரில் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினார். முதலமைச்சர் மெஹ்பூபா முப்தி உள்ளிட்டோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். அமர்நாத் யாத்திரை தொடங்க இருப்பதாலும் தீவிரவாதிகளின் கைகள் ஓங்கி இருப்பதாலும் ரம்ஜானைக் கடந்து சண்டை நிறுத்தம் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என்று பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…