யார் இந்த வஜூபாய் வாலா?கர்நாடகாவில் ஏனிந்த சர்ச்சை.?
ஆளுநர் வஜூபாய் வாலா, கர்நாடகாவின் ஆட்சி பொறுப்பை குமாரசாமியிடம் வழங்காமல்,எடியூரப்பாவிற்கு வழங்கியதில் சர்ச்சை நீடிக்கிறது. இதற்கான பின்னணி தகவலும் கூறப்படுகிறது.
1996ஆம் ஆண்டு குஜராத் மாநில பாஜக தலைவராக வஜூபாய் வாலா இருந்தபோது, மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் தேவேகவுடா பிரதமராக இருந்தார். 121 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் குஜராத் முதலமைச்சராக பாஜகவின் சுரேஷ் மேத்தா பதவியில் இருந்தார். அப்போது, சங்கர்சிங் வகேலாவை தூண்டிவிட்ட காங்கிரஸ், பாஜகவை உடைத்து, அவருடன், 28 பாஜக எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுத்தது.
இதனைத் தொடர்ந்து, அன்றைய பிரதமர் தேவேகவுடாவை வைத்து, காங்கிரஸ், ஆட்சியை கலைத்தது. அப்போது, பெரும்பான்மையுடன் இருக்கும் ஆட்சியை கலைக்க வேண்டாம் என, ஆளுநர் கிருஷ்ணபால் சிங்கிடம், அன்றைய பாஜக குஜராத் மாநிலத் தலைவர் வஜூபாய் வாலா நேரில் சென்று வலியுறுத்தியும் ஆட்சி கலைக்கப்பட்டதாக அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.