இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கடத்திச் சென்று கொல்லப்பட்ட ராணுவ வீரர் அவுரங்கசிப் குடும்பத்தாரை சமீபத்தில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
ரம்ஜான் நோன்பு காலத்தை கருத்தில் கொண்டு காஷ்மீரில் ராணுவத்தின் சார்பில் அமல்படுத்தப்பட்டிருந்த தற்காலிக போர் நிறுத்தம் ரம்ஜான் பண்டிகைக்கு பின்னர் நீட்டிக்கப்படமாட்டாது என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக அறிவித்தார்.
இதை தொடர்ந்து அங்கு பயங்கரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கைகளில் ராணுவத்தினர் வழக்கம்போல் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மெகபூபா முப்தி தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை பா.ஜ.க. நேற்று விலக்கி கொண்டதை தொடர்ந்து அங்கு கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கவர்னர் ஆட்சியால் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் பாதிப்பு ஏற்படாது என ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, டெல்லியில் இன்று பேட்டியளித்த பிபின் ராவத், ‘காஷ்மீரில் ரம்ஜானுக்காக நாங்கள் போர் நிறுத்தம் அறிவித்தோம். அதனால் என்ன ஆனது? என்பதை நாம் பார்த்தோம்.
அங்கு கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதால் எங்கள் நடவடிக்கைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. வழக்கம்போல் பயங்கரவாதிகளுக்கு எதிரான எங்களது பணிகள் தொடரும். எவ்வித அரசியல் தலையீடும் எங்களுக்கு இருக்காது’ என குறிப்பிட்டார்.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…