யாருடனும்  கூட்டணி வைக்க நாங்கள் தயாராக உள்ளோம் : பா ஜ க ..!

Default Image

 

கோவையில் பா.ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் அளித்த பேட்டியில் இப்பொது உள்ள சூழ்நிலையில் தமது கட்சி தென்னிந்தியாவில் வளர்ச்சி கண்டுள்ளதாகவும், இந்த வளர்ச்சி எமது கட்சிக்கு பெருமை சேர்ப்பதாகவும் கூறினார். மேலும் கோவை மாவட்டத்தில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் சிறு,குறு தொழில்கள் முடங்கிவிட்டதாக பல புகார்கள் எழுந்துள்ளன. ஜி.எஸ்.டி வரிவித்திப்பூ முறை நமது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவேய என்றும், இதுகுறித்த புகார்களை ஜி.எஸ்.டி கவுன்சிலிடம் அவர்கள் தெரிவிக்கலாம் என்றும் கூறினார்.

மோடி தலைமையிலான  மத்திய அரசு சிறப்பாக செயல்படுகிறது.பல நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி ஆகா அறிவிக்கப்பட்டது.மேலும்  பல்வேறு திட்டங்கள் மூலம் வளர்ச்சி பாதையை நோக்கி இந்திய பயணிக்கிறது என்றும் கூறினார்.

தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியை வலுப்படுத்த கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா வெறும் 9ம் தேதி சென்னை வருகிறார். மோடி அரசு எப்பொழுதும் தமிழுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாகவும் , இதன் காரணமாகவேய அவர் திருக்குறளை பேசுவதாகவும் கூறினார்.தமிழகத்தில் எய்ம்ஸ், விமானநிலைய விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து உள்ளோம் என்றும் தெரிவித்தார்.

சேலம்- சென்னை இடையே 8 வழி பசுமை சாலை அமைக்க மத்திய அரசு அழுத்தம் கொடுக்கத்தான் செய்யும். விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தில் யாருடனும்  கூட்டணி வைக்க நாங்கள் தயாராக உள்ளோம் வேண்டும் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்