விறுவிறுப்பாக 17 மாநிலங்களில் மொத்தம் 59 எம்.பிக்களைத் தேர்ந்தெடுப்பதற்கான மாநிலங்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மொத்தம் 245 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவைக்கு 17 மாநிலங்களில் இருந்து 59 இடங்கள் காலியாக இருந்தன.
இதில் உத்தரபிரதேசத்தில் 10 இடங்களுக்கும், மகாராஷ்டிராவில் 6 இடங்களுக்கும், பீகாரில் 6 இடங்களுக்கும், மேற்கு வங்கத்தில் 5 இடங்களுக்கும், மத்திபிரதேசத்தில் 5 இடங்களுக்கும், குஜராத்தில் 4 இடங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
இதே போல் கர்நாடகாவில் 4 இடங்களுக்கும், தெலுங்கானா, ராஜஸ்தான், ஒடிசா, ஆகிய 3 மாநிலங்களில் தலா 3 இடங்களுக்கும் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து 2 எம்.பிக்களைத் தேர்ந்தெடுக்க வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதே போல் சத்தீஷ்கர், ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட், கேரளா ஆகிய மாநிலங்களிலிருந்து தலா ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்த 59 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் கிடைக்கப்போகும் முடிவு மாநிலங்களவையில் யார் பெரும்பான்மை பலத்துடன் இருக்கப்போகிறார்கள் என்பதை தீர்மானிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…