இந்த தகவல் மத்தியப் பிரதேச மாநில சைபர் கிரைம் பிரிவு காவல்துறைக்கு கிடைத்துள்ளது. இதை அடுத்து அதிரடி நடவடிக்கையில் இறங்கியவர்கள் ம.பி.யின் இந்தோர் மாவட்டத்தின் மாவ் நகரில் இருந்து மக்ரந்த் சலூங்கே (24) எனும் பொறியாளரை கைது செய்துள்ளனர். இவரிடம் கிடைத்த தகவலின் பேரில் தார் மாவட்டத்தில் இருந்து ஓம்கார்சிங் ராத்தோர் (43) எனும் வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் கண்டுவா மாவட்டத்தில் பிளஸ் 2 வகுப்பில் பயிலும் மாணவர் ஒருவரும் ம.பி. போலீஸாரிடம் சிக்கியுள்ளார்.
இது குறித்து ம.பி. மாநில சைபர் கிரைம் பிரிவு எஸ்பியான ஜிதேந்தர்சிங், ‘தி இந்து’விடம் கூறும்போது, ”கைது செய்யப்பட்டவர்கள் மீது ஐபிசியின் தொழில்நுட்பம் மற்றும் சிறுவர்கள் பாலியல் சம்பந்தப்பட்ட பிரிவான 67 பி-யின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம். மொத்தம் 256 உறுப்பினர்கள் அடங்கிய இந்தக் குழுமத்தில் பெரும்பாலானவர்கள் வடகிழக்கு மற்றும் தென் இந்திய மாநிலப் பகுதியைச் சேர்ந்தவர்கள். இதன் நிர்வாகிகள் அவப்போது மாறியபடி இருந்தனர்” எனத் தெரிவித்துள்ளார்.
எனினும், இதற்காக அந்தக் குழும உறுப்பினர்களிடம் இருந்து கட்டணமாக தொகை எதுவும் வசூலிக்கப்பட்டதா என்பது தெரியவில்லை. அதேபோல், இந்தக் குழும உறுப்பினர்கள் இடையே வேறுவகையான உரையாடல்கள் இருந்ததா என்பது போன்றவை விசாரணையில் உள்ளன. இதற்காக, குஜராத, வட கிழக்கு மற்றும் தென்னிந்திய மாநில காவல்துறையினருடனும் ம.பி. போலீஸ் தொடர்பு கொள்ள இருக்கிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.