ம.பியில் சிறுவர்கள் தொடர்பான உலகளாவிய பாலியல் வாட்ஸ் அப் குரூப்!பள்ளி மாணவர்கள் உட்பட 3 பேர் கைது !

Default Image

மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிறுவர்கள் தொடர்பான சர்வதேச பாலியல் வாட்ஸ் அப் குழுமம் ரகசியமாக நடத்தப்பட்டு வந்திருப்பது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் பிளஸ் 2 மாணவர் உட்பட மூவரை அம்மாநில சைபர் பிரிவு கைது செய்துள்ளது.

சிறுவர்கள் தொடர்பான பாலியல் குறித்து இயங்கிய வாட்ஸ் அப் குழுமத்தில் இந்தியா, பாகிஸ்தான், சவூதி அரேபியா, வளைகுடா நாடுகள், இலங்கை, மெக்சிகோ, கனடா, வியட்நாம், மெயன்மார், உகாண்டா மற்றும் அல்ஜீரியா உள்ளிட்ட 28 நாடுகளில் உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். குவைத் நாட்டின் மொபைல் எண்களில் இருந்து அந்த குழுமத்தில் சிறுவர்களின் பாலியல் படங்கள் அதிகமாக அனுப்பப்பட்டு வந்துள்ளன. இதன் நிர்வாகிகளில் ஒருவராக குஜராத்தைச் சேர்ந்தவரும் இருந்துள்ளார்.

இந்த தகவல் மத்தியப் பிரதேச மாநில சைபர் கிரைம் பிரிவு காவல்துறைக்கு கிடைத்துள்ளது. இதை அடுத்து அதிரடி நடவடிக்கையில் இறங்கியவர்கள் ம.பி.யின் இந்தோர் மாவட்டத்தின் மாவ் நகரில் இருந்து மக்ரந்த் சலூங்கே (24) எனும் பொறியாளரை கைது செய்துள்ளனர். இவரிடம் கிடைத்த தகவலின் பேரில் தார் மாவட்டத்தில் இருந்து ஓம்கார்சிங் ராத்தோர் (43) எனும் வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் கண்டுவா மாவட்டத்தில் பிளஸ் 2 வகுப்பில் பயிலும் மாணவர் ஒருவரும் ம.பி. போலீஸாரிடம் சிக்கியுள்ளார்.

இது குறித்து ம.பி. மாநில சைபர் கிரைம் பிரிவு எஸ்பியான ஜிதேந்தர்சிங், ‘தி இந்து’விடம் கூறும்போது, ”கைது செய்யப்பட்டவர்கள் மீது ஐபிசியின் தொழில்நுட்பம் மற்றும் சிறுவர்கள் பாலியல் சம்பந்தப்பட்ட பிரிவான 67 பி-யின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம். மொத்தம் 256 உறுப்பினர்கள் அடங்கிய இந்தக் குழுமத்தில் பெரும்பாலானவர்கள் வடகிழக்கு மற்றும் தென் இந்திய மாநிலப் பகுதியைச் சேர்ந்தவர்கள். இதன் நிர்வாகிகள் அவப்போது மாறியபடி இருந்தனர்” எனத் தெரிவித்துள்ளார்.

எனினும், இதற்காக அந்தக் குழும உறுப்பினர்களிடம் இருந்து கட்டணமாக தொகை எதுவும் வசூலிக்கப்பட்டதா என்பது தெரியவில்லை. அதேபோல், இந்தக் குழும உறுப்பினர்கள் இடையே வேறுவகையான உரையாடல்கள் இருந்ததா என்பது போன்றவை விசாரணையில் உள்ளன. இதற்காக, குஜராத, வட கிழக்கு மற்றும் தென்னிந்திய மாநில காவல்துறையினருடனும் ம.பி. போலீஸ் தொடர்பு கொள்ள இருக்கிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்