ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் அத்துமீறி வருவதாக பிரிவினைவாத அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன. பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரிவினைவாத தலைவர்களான மிர்வாய்ஸ் உமர் பாரூக், சையது அலி ஷா கிலானி ஆகியோர் தலைமையில் ஸ்ரீநகரின் மையப்பகுதியான லால் சவுக் பகுதியை நோக்கி இன்று 11 மணிக்கு பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் பிரதமர் மோடியின் வருகையையொட்டி, அந்த பேரணியை நிறுத்துவது மற்றும் இதர பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பிரிவினைவாத தலைவர்களான மிர்வாய்ஸ் உமர் பாரூக், சையது அலி ஷா கிலானி ஆகியோர் அவரவர் வீடுகளிலேயே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மோடியின் வருகைக்காக அப்பகுதியில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ஷேர் இ காஷ்மீர் சர்வதேச கருத்தரங்க மையத்துக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு நாளை பிரதமர் அங்கிருந்து கிளம்பும் வரை நீட்டிக்கப்படும் எனவும் போலீசாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…
சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை…
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…