Categories: இந்தியா

மோடி ஒரு ‘தேள்’ என்று கூறிய சசி தரூர் மீது அவதூறு வழக்குப் பதிவு..!!

Published by
Dinasuvadu desk

பெயர் கூறாத ஆர்.எஸ்.எஸ். நபர் கூறியதாக மேற்கோள் காட்டி பிரதமர் மோடியை ‘சிவலிங்கத்தின் மீதமர்ந்துள்ள தேள்’ என்று சசி தரூர் வர்ணித்தது பெரிய சர்ச்சைகளைக் கிளப்ப சசி தரூருக்கு எதிராக குற்ற அவதூறு வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது.

டெல்லி பாஜக தலைவர் ராஜீவ் பப்பார் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார், அதில் அவதூறு செய்யும் நோக்கத்துடன் சசி தரூர் கூறிய வார்த்தைகள் இந்துக் கடவுளைக் கேவலப்படுத்துவதோடு, நாட்டின் பிரதமரையும் அவதூறு செய்வதாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார். வழக்கறிஞர் நீரஜ் என்பவர் மூலம் இந்த அவதூறு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றம்சாட்டப்பட்டவரின் பேச்சு மிகவும் தரம் தாழ்ந்தது என்பதோடு புகார்தாரரின் மத நம்பிக்கைகளை இழிவு படுத்துவதாக அமைந்துள்ளது.பெங்களூரு இலக்கியத் திருவிழாவில் சசி தரூர் சமீபமாக பேசிய போது 6 ஆண்டுகளுக்கு முன்பாக ஆர்.எஸ்.எஸ். நபர் ஒருவர் கூறியதாக சசி தரூர் பேசிய போது, இந்த தனிநபர் வழிபாடு ஆர்.எஸ்.எஸ். நிறுவனத்தில் நன்றாகப் பார்க்கப்படவில்லை. பெயர் தெரியாத அந்த ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் அதிரடி உருவகம் ஒன்றைப் பயன்படுத்தினார். அது மோடியை அடக்க முடியாத அவர்களது வெறுப்பைக் காட்டுவதாக அமைந்தது.

அந்த பெயர் தெரியாத நபர் கூறிய போது, சிவலிங்கத்தின் மீதமர்ந்த தேள் போன்றவர் மோடி, தேளை தட்டி விட நினைத்தால் நம் கையை கொட்டிவிடும், அதனை வேறு எதனைக் கொண்டும் அடிக்கவும் முடியாது, காரணம் அது சிவலிங்கத்தை இழிவு படுத்துவதாக அமையும், ஹிந்துத்துவா இயக்கம் அதன் மீதான மோடியின் இருப்பு ஆகியவை பற்றிய மிகச் சிக்கலான உறவுகளை நுட்பமாகத் தெரிவிக்கும் உருவகமே சிவலிங்கத்தின் மீதமர்ந்த தேள்” என்று சசி தரூர் பேசியது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். காரர் கூறியது 6 ஆண்டுகளுக்கு முன்பாக அப்போது மோடி பிரதமரும் இல்லை ஆனால் இப்போது அவரது புகழ் உலகம் முழுதும் பரவியுள்ளது. தற்போது எங்கிருந்தோ குழிதோண்டி இந்த வர்ணிப்பைப் பயன்படுத்துவது இந்தக் காலக்கட்டத்தில் அவதூறு நோக்கம் கொண்டது என்று ராஜீவ் பப்பார் தன் மனுவில் கூறியுள்ளார்.

குற்ற அவதூறு வழக்கு அற்பத்தனமானது என்று சசி தரூர் கண்டனம் தெரிவித்துள்ளார். பேச்சுச் சுதந்திரத்துக்கு எதிரானது என்கிறார் அவர்.வெளியான ஒரு உள்ளடக்கத்திலிருந்து மேற்கோள் கூடக் காட்டக்கூடாது என்று கூறினால் நாம் எங்கு போய் முடிவோம்? நம் ஜனநாயகம் எங்கு போகிறது? பேச்சுச் சுதந்திரம் எங்கே?” என்று சசி தரூர் பாய்ந்துள்ளார்.

dinasuvadu.com 

Published by
Dinasuvadu desk

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

5 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

5 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

5 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

5 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

5 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

5 hours ago