மோடி இந்தியாவின் குடிமகனா..? ஆதாரம் இருக்க.?அப்ப கொடுங்க..ஆர்டிஜக்கு மனு போட்ட குடிமகன்…!
- மோடி இந்தியாவின் குடிமகனா..?ஆதரத்தை காட்டுங்கள் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு
- கேரளாவைச் சேர்ந்த ஒருவர் ஆர்டிஜயிடம் விளக்கம் கேட்டும் ஆதரத்தை காண்பிக்க வலியுறுத்தி மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த சட்டதிருத்தை அமல்படுத்த மாட்டோம் என மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றது.
இந்நிலையில் மக்கள் தொகை கணகெடுப்பு நாடு முழுவதும் தொடங்க உள்ள நிலையில் பிரதமர் மோடி இந்திய குடியுரிமை பெற்றவர்தானா? என்று கேரளாவைச் சேர்ந்த ஒருவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் மனு அளித்துள்ளார்.
மோடி குடியுரிமை குறித்து கேள்வி எழுப்பியவர் யார்.? என்றால் கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தைச் சேந்த ஜோஸ் கல்லு வீட்டில் என்வர் தான் இவர் சாலக்குடி நகராட்சியின் பொது தகவல் அதிகாரியிடம் தான் இந்த மனுவை அளித்துள்ளார்.
அவர் அளித்த அந்த மனுவில் மோடி இந்திய குடியுரிமை பெற்றவர்தான் என்பதை நிரூபிக்கும் ஆவணம் எது? என்று ஜோஸ் கேட்டு உள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.