மோடி அரசை கண்டித்து செப். 10இல் நாடு தழுவிய போராட்டம்..!!

Default Image

சென்னை:
பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 82.62 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 75.61 காசுகளாகவும் விலை உயர்ந்துள்ளது. விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் மத்திய பாஜக அரசு வேடிக்கை பார்ப்பதாக பொதுமக்கள் குமுறலுடன் கூறுகின்றனர்.
எண்ணெய் நிறுவனங்கள் மூலம் எரிபொருள் விலையை தினந்தோறும் மாற்றியமைக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டது. அதைத் தொடர்ந்து நாடு முழு வதும் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு உருளை விலை வரலாறு காணாத அளவுக்கு
உயர்ந்துள்ளது.

Image result for பாஜக

ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் லிட்டருக்கு  ரூ. 50 ஆக விற்பனை செய்யப்படும் என
பாஜக வாக்குறுதி அளித்தது. ஆனால் தற்போது விலை உயர்வுக்கு வேறு காரணங்
களைக் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு மத்திய அரசு, மக்கள் விரோதப்போக்கையே கடைப்பிடித்து வருகின்றது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, இந்தியாவில் குறைக்காமல், அதன் பயனை மக்களுக்குத் தராமல் வரியை உயர்த்தியது.இதன் மூலம்  மத்திய அரசு ஏற்கெனவே பல லட்சம் கோடி  ரூபாய் வருவாய் ஈட்டியது. இப்போது, பெட்ரோலியப் பொருள்களின் விலை உச்சத்தில் உள்ளது.

சர்வதேச காரணிகளால் விலை உயர்ந்து விட்டதாக மத்திய அரசு கூறி மக்கள் மீது பெரும் சுமையை ஏற்றி வருகிறது. இந்த கடும் விலை உயர்வால் சாமானிய மக்கள், நடுத்தரப் பிரிவினர், விவசாயிகள், சிறு வணிகர்கள், போக்குவரத்து தொழிலை சார்ந்து இருப்பவர்கள் என நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Image result for பெட்ரோல் லிட்டருக்கு

பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிப்பை ஜிஎஸ்டி வரி வரம்பில் கொண்டு வர  வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்து கின்றன. ஆனால் இதற்கு பாஜக அரசு செவிமடுக்கவில்லை.இந்த நிலையில், சென்னையில் வியாழ னன்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு நேற்றைய விலையை விட 21 காசுகள் உயர்ந்து ரூ.82.62 காசுகளாகவும், டீசல் விலை லிட்டர் ஒன்றிற்கு 22 காசுகள் உயர்ந்து ரூ.75.61 காசுகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு மக்கள் தலையில் இடியை இறக்கி, அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது.

 

டீசல் மீதான கலால் வரி 2014-ஆம்  ஆண்டில் ஒரு லிட்டருக்கு ரூ.3.46 ஆக
இருந்தது. இப்போது, ரூ.15.33 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பாஜக ஆட்சியில் மத்திய
கலால் வரி 12 முறை அதிகரிக்கப்பட்டுள்ளது. இவைதான் தற்போதைய பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் என கூறப்படுகிறது.

Image result for காங்கிரஸ் கட்சி

எனவே செப்.10 அகில இந்திய பந்த் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறிய மத்திய பாஜக அரசை கண்டித்தும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் செப்டம்பர் 10 ஆம் தேதியன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்