மோடி அரசு நிச்சயம் தோற்கும்…முதல்வர் அதிரடி பேச்சு…!!
வருகிற பாராளுமன்ற தேர்தலில் மோடி அரசு நிச்சயம் தோற்கும் என்று முதல்வர் சந்திரபாபுநாயுடு கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பொதட்டூரில் நடந்த தெலுங்கு தேசம் கட்சி பொதுக் கூட்டத்தில் முதல்வர் சந்திரபாபுநாயுடு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
மாநில பிரிவினை சட்டப்படி ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தரப்படும் என்று மத்திய அரசு வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து கூட்டணியில் நீடித்து வந்தோம். ஆனால் மத்திய அரசு மாநில சிறப்பு அந்தஸ்தை தராமல் ஏமாற்றியதால் கூட்டணியில் இருந்து விலகினோம்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் மோடி அரசு நிச்சயம் தோற்கும். பா.ஜனதாவுக்கு எதிரான கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டும். மோடியை பார்த்து எனக்கு எந்த பயமும் கிடையாது. நான் முதல்வர் ஆன 7 ஆண்டுக்கு பிறகுதான் அவர் குஜராத் முதல்வராக பதவி ஏற்றார். அவரை விட எனக்கு அனுபவம் அதிகம்.
கடப்பா மாவட்டத்தில் ஸ்டீல் தொழிற்சாலை மத்திய தரசு அமைக்கும் என்று நாம் நீண்ட காலம் காத்து இருந்து விட்டோம்.ஆனால் அதை அவர்கள் இதுவரை செய்யவில்லை. இதனால் நாமே ஸ்டீல் தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்துள்ளோம். அடுத்து 2 நாட்களில் அமைச்சரவை கூடி அதற்கான அறிவிப்பை வெளியிடும் என்று அவர் பேசினார்.
dinasuvadu.com