மேற்குவங்கத்தில் இருந்து ஒருவர் பிரதமராக முடியுமானால் அது மம்தா பானர்ஜி மட்டுமே’ என மேற்குவங்க பா.ஜ.க தலைவர் தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநில திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே நிறைய மோதல்கள் இருந்து வருகிறது. முன்னதாக பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா கொல்கத்தாவில் பேரணை நடத்த மம்தா பானர்ஜி மறுப்பு தெரிவித்தார்.டிஹனால் இரு கட்சியினருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவிவருகிறது. இந்நிலையில் மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷ், மம்தா பானர்ஜியை புகழ்ந்து பேசியிருப்பது தேசிய அளவில் பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “மேற்கு வங்கத்தில் இருந்து பிரனாப் முகர்ஜி குடியரசுத்தலைவராகப் பதவிவகித்துவிட்டார்.இதேபோல இந்த மாநிலத்தில் இருந்து ஜோதி பாசுவை பிரதமராக்கவேண்டும் என நாங்கள் முயற்சி செய்தோம் ஆனால் அதற்கு அவரின் கட்சி இடமளிக்கவில்லை.
அடுத்ததாக மேற்குவங்கத்தில் இருந்து ஒருவர் பிரதமராக முடியுமெனில் அந்த முழுத் தகுதி மம்தா பானர்ஜிக்கு மட்டுமே உண்டு. அவரின் வளர்ச்சியை நம்பியே மாநிலம் உள்ளது. அவர் நன்றாக வேலை செய்கிறார் என அவருக்குத் தெரியும். அவரின் நல்ல உடல்நலத்துக்காகவும் முன்னேற்றாத்துக்கவும் நான் இறைவனைப் பிரார்த்திக்கிறேன். ”என்று அம்மாநில பாஜக தலைவர் ஒருவரே புகழ்ந்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
DINASUVADU.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…