"மோடியை திருடன் என்ற பிரான்ஸ் அதிபர்" ராகுல் பரபரப்பு பேச்சு…!!
பிரான்ஸ் அதிபர் ஒருவர், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை திருடன் என்று கூறுவது இதுவே முதல்முறை என்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி பகிரங்கமாக பேசியுள்ளார். ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தலுக்காக சித்தோகர்க் பகுதியில் தேர்தல் பிரச்சார செய்த ராகுல் காந்தி ,ரஃபேல் முறைகேடு குறித்து பேசினார். அப்போது, ராணுவ விமான தயாரிப்பில் 30 ஆயிரம் கோடி ரூபாயை எடுத்து அனில் அம்பானியின் பையில் பிரதமர் மோடி வைத்துவிட்டதாக பிரதமர் மோடியை கடுமையாக குற்ற சாட்டிய ராகுல் காந்தி, இந்திய பிரதமர் ஒருவரை பிரான்ஸ் அதிபர் திருடன் எனக் கூறுவது இதுவே முதல்முறை என்று பேசிய ராகுல்காந்தி, இது வெட்கப்பட வேண்டிய செய்தி என்றார்.
dinasuvadu.com