புதுதில்லி;
அமெரிக்க உத்தரவுக்கு அடிபணிந்து, ஈரானில் இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் அளவை பாதியாக குறைத்துக் கொள்ள ஏற்கெனவே இந்தியா முடிவு செய்திருந்தது.இதனால், இந்தியாவில் பெட்ரோல் – டீசல் விலை மேலும் பலமடங்கு உயரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா – ஈரான் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டில் அணு ஆயுத ஒப்பந்தம் கையெழுத்தானது. அணு செறிவூட்டல் பணிகளை ஈரான் கைவிட்டால், அமெரிக்கா அந்நாட்டிற்கு சலுகைகளை அளிக்கும் என்று அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டு இருந்தது.
ஆனால், இந்த ஒப்பந்தத்தை ஈரான் மீறிவிட்டதாக, பொய்யான குற்றச்சாட்டை வைத்த அமெரிக்கா, ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாகவும் தன்னிச்சையாக அறிவித்தது. அதுமட்டுமன்றி, ஈரான் மீது பொருளாதாரத் தடைகளையும் விதித்தது. ஈரானிடமிருந்து எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்யக்கூடாது உலக நாடுகளுக்கு மிரட்டலையும் விடுத்தது.
ஈரானில் இருந்து கச்சா எண்ணெய்யை அதிகமாக இறக்குமதி செய்வதில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. இந்நிலையில், ஈரானிடமிருந்து ஒரு சொட்டு கச்சா எண்ணெய்யைக் கூட இறக்குமதி செய்யாத நிலையை நோக்கி நவம்பருக்குள் இந்தியா செல்ல வேண்டும் என்று அமெரிக்கா மிரட்டியுள்ளது. இந்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் அதை ஏற்றுக்கொள்ளவும் செய்துள்ளன.
முதற்கட்டமாக இறக்குமதியைப் பாதியாகக் குறைத்து, பின்னர் படிப்படியாக முற்றிலும் இறக்குமதியை நிறுத்தி விடுவது என்பதுதான் இந்திய எண்ணெய் நிறுவனங்களின் திட்டம்.
அதாவது, ஈரானில் இருந்து நாளொன்றுக்கு 6 லட்சத்து 58 ஆயிரம் பேரல் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்து வந்தது. அது தற்போது, நாளொன்றுக்கு 3 லட்சத்து 60 ஆயிரம் பேரல்களாக – 45 சதவிகிதம் அளவிற்கு குறைக்கப்பட உள்ளது.
ஏனெனில், இந்தியாவின்மேல் பரிதாபப்பட்டு, கச்சா எண்ணெய் விலையில் கணிசமான விலைத் தள்ளுபடியை இஸ்லாமிய குடியரசுக் நாடுகள் வழங்கி வருகின்றன. குறிப்பாக, ஈரான் இந்தியாவுக்கு மிகப்பெரிய சலுகை அளித்து வருகிறது. கச்சா எண்ணெய்க்கான பணத்தை, ஏனைய நாடுகள் டாலராகவே பெற்று வந்தன. ஆனால், ஈரான் நாடு அதனை இந்திய ரூபாயாகவே பெற்றுக் கொண்டது. இதனால், அந்நியச் செலாவணி நெருக்கடியிலிருந்து இந்தியா பெருமளவு தப்பித்து வந்தது.
ஆனால், தற்போது ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை, பாதியாக குறைப்பதன் மூலம் மிகப்பெரிய பாதிப்பை இந்தியா சந்திக்கவுள்ளது. ரூபாய் பரிவர்த்தனையில் நடக்கும் வர்த்தகம், டாலருக்கு மாறுவதால், ரூபாய் மதிப்பு மேலும் சரியும். இதனால் பெட்ரோல் – டீசல் விலை மேலும் பல மடங்கும் அதிகரிக்கும்.
இவை எதையும், மத்திய பாஜக அரசு எதையும் யோசிப்பதாக இல்லை. அமெரிக்காவின் சொல்பேச்சுக்கு, இந்திய மக்களின் நலனை காவுகொடுக்கும் வேலையில் கண்ணைமூடி இறங்கி விட்டது.இந்தியாவின் பிரதமர் மோடியின் பயத்தால் மக்கள்தான் பாதிக்கப்படப் போகிறார்கள்.
DINASUVADU
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…