Categories: இந்தியா

மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி : ஐ.நா. அறிக்கை..!

Published by
Dinasuvadu desk
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மனித உரிமைகள் மீறப்படுகிறது, இதுதொடர்பாக சர்வதேச விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என ஐ.நா. அறிக்கையை வெளியிட்டது. இதற்கு இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. “வெளிப்படையான பாரபட்சம்” மற்றும் “தவறான கதை” உருவாக்கும் முயற்சியாகும்.”  “ஐ.நா.வின் அறிக்கையை இந்தியா நிராகரிக்கிறது. ஐ.நா.வின் அறிக்கை ஏமாற்றும் செயல், முரண்பாடானது மற்றும் நோக்கம் கொண்டது. இதுபோன்ற அறிக்கைக்கான நோக்கம் என்னவென்று கேள்வியை எழுப்புகிறோம். ஐ.நா.வின் அறிக்கை இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறுவது.
ஒட்டுமொத்த ஜம்மு காஷ்மீரும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். பாகிஸ்தான் இந்தியப்பகுதியை சட்டவிரோதமாகவும், வலுக்கட்டாயமாகவும் ஆக்கிரமித்து உள்ளது,” என இந்திய வெளியுறவுத்துறை கூறியது. பெரும்பாலும் சரிபார்க்கப்படாத தகவல்கள் தொகுப்பை கொண்டு திட்டமிடப்பட்ட பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது எனவும் குற்றம் சாட்டியது. இவ்விவகாரத்தை கையில் எடுத்து உள்ள சிவசேனா, மோடியின் தலைமையிலான பா.ஜனதா அரசை மீண்டும் விமர்சனம் செய்துள்ளது.
சிவசேனாவின் அதிகாரபூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வில், இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு நகைப்புக்குள்ளாகி இருக்கிறது. ரம்ஜான் காலத்தில் காஷ்மீரில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களுக்கு மத்திய அரசை தான் குற்றம்சாட்ட வேண்டும். கடந்த 4 மாதங்களில் மட்டும் காஷ்மீரில் 400–க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். அதில் பெரும்பாலானோர் நமது ராணுவ வீரர்கள். நாட்டின் ராணுவ மந்திரி உட்கட்சி விவகாரங்களில் பரபரப்பாக இருக்கும் நிலையில் பிரதமர் மோடியோ வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
பிரதமரின் கடந்த 4 ஆண்டுகால வெளிநாட்டு பயணங்களால் சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்து இருப்பதாக கூறப்படும் கருத்து காஷ்மீர் குறித்த தற்போதைய ஐ.நா. அறிக்கையை தொடர்ந்து தவிடுபொடியாகி விட்டது. பிரதமர் மோடி எண்ணற்ற வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்ட போதிலும், காஷ்மீர் விவகாரத்தில் யாரும் இந்தியாவின் பக்கம் நிற்க தயாராக இல்லை. இவை பிரதமர் மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி அடைந்து இருப்பதையே காட்டுகிறது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Recent Posts

100 நாள் வேலைத் திட்டம் ஊதிய நிலுவைத் தொகை : பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர்!

100 நாள் வேலைத் திட்டம் ஊதிய நிலுவைத் தொகை : பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர்!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…

12 minutes ago

பொங்கல் திருநாள் : த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து!

சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…

32 minutes ago

“பின் வாங்குற பழக்கம் இல்லை “.. இட்லிகடை ரிலீஸ் தேதியை உறுதி செய்த தனுஷ்!

சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…

47 minutes ago

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…

1 hour ago

H1B விசா கொள்கையில் மாற்றம் வருமா? கலகத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள்.!

நியூ யார்க : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க போகிறார். அந்த…

2 hours ago

பொங்கல் பண்டிகை : பயணிகள் கவனத்திற்கு! மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

சென்னை :  பொங்கல் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் பலரும் மெட்ரோ ரயில்களை புக்கிங் செய்து வருகிறார்கள். இந்த சூழலில், பொங்கல்…

2 hours ago