நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார். ஏனெனில் 2 தேர்தல்களும் அடுத்தடுத்து நடப்பதாலும், வளர்ச்சி பணிகள் பாதிப்பதாலும், மக்கள் பணம் செலவழிவதாலும் , பல திட்டங்களில் தடுமாற்றம் ஏற்படுவதாலும் அதை தவிர்க்க ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நல்லது என்று அவர் கருதுகிறார்.
அவரது இந்த புதிய முடிவுக்கு சட்ட ஆணையமும் ஒப்புதல் அளித்துள்ளது. 2019-ம் ஆண்டு மற்றும் 2024-ம் ஆண்டு என இரண்டு கட்டங்களாக ‘ஒரே நேரத்தில் தேர்தல்’ திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என்று சட்ட ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.
அதாவது, 2021-ம் ஆண்டுக்குள் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடத்தலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது.இந்த திட்டம் குறித்து மணிலா அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.ஏனெனில் அவர்களின் ஆட்சி காலத்தில் மாற்றம் ஏற்படுகிறது என்ற கருத்தும் கூறப்படுகிறது., மற்ற மாநிலங்களில் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடத்தலாம் என்றும் சிபாரிசு செய்துள்ளது.
இந்நிலையில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து கருத்தொற்றுமையை உருவாக்க அரசியல் கட்சிகளுடன் டெல்லியில்,கடந்த 7 ந்தேதி சட்ட ஆணையம் ஆலோசனை நடத்தியது.ஆனால் இந்த திட்டத்திற்கு அதிமுக, திமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து தெரிவித்தன. இந்த நிலையில் பாராளுமன்றம் மற்றும் சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ரூ.5 ஆயிரம் கோடி செலவாகும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஒரே நேரத்தில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டுமானால் கூடுதலாக பல லட்சம் எந்திரங்கள் வாங்கப்பட வேண்டும் என்றும் அவ்வாறு கூடுதலாக மின்னணு எந்திரங்கள் வாங்குவதற்கு சுமார் ரூ.5000 கோடி தேவைப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அதேபோல் தேர்தல் அதிகாரிகளும் அதிக அளவு தேவைப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.