பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 4 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசு மீதான பொதுமக்களின் மனநிலையை அறியும்வண்ணமாக ‘நமோ செயலி’ மூலம் கணக்கெடுப்பு நடத்தும் திட்டத்தை மோடி தொடங்கியுள்ளார்.
மேலும், இந்தக் கணக்கெடுப்பில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மற்றும் தொகுதிகளின் நிர்வாகம் குறித்தும் மக்களின் கருத்துகள் அறியப்படும்.
மத்திய அரசின் செயல்பாடு, திட்டங்கள் மட்டுமல்லாது உள்ளூர் எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடுகள் தொடர்பாகவும் பொதுமக்கள் தர மதிப்பீடு செய்ய இந்த கணக்கெடுப்பு வழிவகுக்கும்.
மேலும் மாநில அளவிலும், தொகுதி ரீதியாகவும் மிகவும் பிரபலமாக உள்ள பாஜக தலைவர்கள் 3 பேர் குறித்து கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்படும்.
மேலும் தங்களது தொகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய உள்கட்டமைப்பு வசதிகள், பிற வசதிகள், வாக்குப் பதிவின்போதான மக்களின் தேவைகள் உள்ளிட்டவை குறித்தும் கருத்து கேட்கப்படும்.
கடந்த காலங்களில் பொதுமக்கள் மற்றும் பிரதமருக்கு இடையிலான இணைப்புப்பாலமாக நமோ செயலி விளங்கியுள்ளது. குறிப்பாக, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது லட்சக்கணக்கான மக்கள் இந்த செயலி மூலமாக தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
இந்நிலையில், இச்செயலி மூலம் தனது 4 ஆண்டுகால ஆட்சியின் செயல்பாடு குறித்து பொதுமக்களின் கருத்துகளை அறிய பிரதமர் திட்டமிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…